நடிகர் சங்கத் தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 18ம் தேதி தேர்தல்!

நடிகர் சங்கத் தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 18ம் தேதி தேர்தல்!
Updated on
1 min read

நடிகர் சங்கத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரும் 18ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.

நடிகர் சங்கத்துக்கான 2015-18ம் ஆண்டுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் அக்டோபர் 18ம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் பள்ளியில் நடைபெற இருக்கிறது. இம்முறை நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணி - விஷால் அணி இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இத்தேர்தலில் நாடக நடிகர்கள் மற்றும் திரைப்பட நடிகர்கள் என அனைவரிடமும் இரண்டு தரப்பினரும் தீவிரமாக வாக்குகள் சேகரித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இத்தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு நாசர், சரத்குமார், சிவசாமி ஆகியோரும், துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ், மோகன் குமார், பொன்வண்ணன், சிலம்பரசன், விஜயகுமார் ஆகியோரும் போட்டியிடுக்கிறார்கள்.

செயலாளர் பதவிக்கு ராதாரவி, சிவசாமி, விஷால் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் மற்றும் கார்த்தியும் போட்டியிடுகிறார்கள்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு குட்டி பத்மினி, மோகன்ராமன், நிரோஷா, பசுபதி, பிரசன்னா, ஸ்ரீமன், தளபதி தினேஷ், உதயா, ராம்கி, ரமணா, கோவை சரளா என மொத்தம் 48 போட்டியிட இருக்கிறார்கள்.

வரும் 18ம் தேதி காலை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினம் முடிவும் அறிவிக்க இருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in