

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, நானி நடிக்கவிருக்கும் படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக சயாமி கர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
மணிரத்னம் படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கார்த்தி, துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து நித்யா மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் படமாக்க திட்டமிட்டார் மணிரத்னம். துல்கர் சல்மான் தேதிகள் பிரச்சினை காரணமாக விலகியதால் தெலுங்கு நடிகர் நானி ஒப்பந்தம் செய்யப்பட்டார். மணிரத்னம் தற்போது தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரை இப்படத்தின் இணை தயாரிப்பாளராக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் இருந்து விலகி இருக்கிறார். இவருக்கு பதிலாக சயாமி கர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். பாக்யராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கிவிட்டதால், கீர்த்தி சுரேஷ் விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அடுத்தாண்டு துவங்க இருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.