விஜய் வரி ஏய்ப்பு செய்தது உண்மையே: அதிகாரிகள் உறுதி

விஜய் வரி ஏய்ப்பு செய்தது உண்மையே: அதிகாரிகள் உறுதி
Updated on
1 min read

வருமான வரித் துறையின் சோதனையை அடுத்து, வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்டுள்ள குற்றச்சாட்டை நடிகர் விஜய் மறுத்துள்ளார்.

ஆனால், அவர் வரி ஏய்ப்பு செய்தது உண்மை என்றும், விரைவில் அது பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் நடிகர் விஜய் உள்ளிட்ட புலி படத்தில் தொடர்புடையவர்கள் வீடுகளிலும், நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது.

இதைத் தொடர்ந்து, விஜய் கடந்த 5 வருடங்களாக வரி ஏய்ப்பு செய்ததது தெரிய வந்ததாக செய்திகள் வெளியாகின. இந்தல் குற்றச்சாட்டை நடிகர் விஜய் மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

தான் தொடர்ந்து தனது சொத்து, வருமானம் பற்றிய விவரங்களை முறையாக செலுத்தி வருவதாகவும் ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியானதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். | செய்திக்கு -> வரி ஏய்ப்பு செய்யவில்லை: நடிகர் விஜய் விளக்கம் |

தற்போது இது குறித்து சோதனை நடத்திய மூத்த வருமான வரித்துறை அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது, "அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளார். அது விரைவில் வசூலிக்கப்பட்டும். இது குறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படும்" என்றார்.

இந்தச் சோதனைகளில் ரூ.25 கோடி வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டது தெரிய வந்துள்ளதாகவும், சோதனைகளைத் தொடர்ந்து ரூ. 2 கோடி மதிப்புள்ள ரொக்கமும், தங்கமும் தனித்தனியாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தது கவனிக்கத்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in