

புகழ்பெற்ற ரிச்சர்டு அட்டன்பரோவின் ‘காந்தி’ திரைப்படத் தின் தமிழ் மொழி யாக்கம் காந்தி ஜெயந்தி அன்று (நாளை) சென்னையின் சில திரையரங்குகளில் சிறப்புக் காட்சியாகத் திரையிடப்படுகிறது.
காந்தியத்தை இளைய தலைமுறை யினரிடம் எடுத்துச் செல்லும் நோக்கில் கட்டணம் இல்லாமல் ‘காந்தி’ திரைப்படமும் கூடவே ‘மீண்டும் காந்தி’ எனும் ஆவணப் படமும் திரையிடப்படுகிறது. ‘அன்னை அபிராமி’ யில் காலை 8.30 காட்சியாகவும் ‘சத்யம் ஸ்டுடியோ 5’, ‘சாய் சாந்தி’, ‘பெரம்பூர் எஸ் 2’ ஆகிய திரையரங்குகளில் காலை 9 மணி காட்சியாகவும் இந்தத் திரையிடல் நடக்கிறது.
தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகமும் காந்தி சர்வ சமய பிரார்த்தனை மையமும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளன. “தமிழகம் முழுவதும் இதுபோன்ற முயற்சியை மேற்கொள்கிறோம்; முன்னோட்டமாக சென்னையில் முதல் திரையிடலை நடத்துகிறோம்” என்று இதுபற்றி தெரிவித்திருக்கிறார் ஒருங்கிணைப்பாளர் முருகேசன்.
இதுபற்றி மேலும் தகவல்களைப் பெற தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9790842245, 9790906735.