கமலுக்குப் புகழாரம் சூட்டிய நவாசுதீன் சித்திக்

கமலுக்குப் புகழாரம் சூட்டிய நவாசுதீன் சித்திக்
Updated on
1 min read

கமல் பிறந்த நாளை முன்னிட்டு நவாசுதீன் சித்திக் அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

நேற்று (நவம்பர் 7) கமல் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு அரசியல் கட்சியினர், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள். மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தின் தலைப்பு 'விக்ரம்' என அறிவிக்கப்பட்டது. அதற்கான டீஸர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டது.

ட்விட்டர் தளத்தில் பல்வேறு திரையுலகினர் தங்களுடைய ட்விட்டர் பதிவில் கமலுக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தனர். இந்தித் திரையுலகின் முன்னணி நடிகரான நவாசுதீன் சித்திக் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

''இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கமல் சார். பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தியவர் நீங்கள். உங்களோடு பணிபுரிவதும், உங்கள் திறமையின் சிறு பொறியிலிருந்து வெளிச்சம் பெறுவதும் என்னுடைய அதிர்ஷ்டம். 'விக்ரம்' படத்தை எதிர்பார்க்கிறேன்".

இவ்வாறு நவாசுதீன் சித்திக் தெரிவித்துள்ளார்..

சில தினங்களுக்கு முன்பு நவாசுதீன் சித்திக் அளித்த பேட்டியில், 'ஹே ராம்' மற்றும் 'ஆளவந்தான்' உள்ளிட்ட படங்களில் கமலுடன் இணைந்து பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார். இந்த இரண்டு படங்களிலுமே இந்தி வசனப் பயிற்சியாளராக நவாசுதீன் பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in