40க்கும் மேலான ஆண்டுகளைப் படப்பிடிப்புக்காகச் செலவழித்த கமல்: அனிருத் வியப்பு

40க்கும் மேலான ஆண்டுகளைப் படப்பிடிப்புக்காகச் செலவழித்த கமல்: அனிருத் வியப்பு
Updated on
1 min read

40க்கும் மேலான ஆண்டுகளைப் படப்பிடிப்புக்காகக் கமல் செலவழித்திருப்பதை அனிருத் வியப்புடன் தெரிவித்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள படத்துக்கு 'விக்ரம்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. டீஸர் ஒன்றை ஷூட் செய்து இத்தலைப்பை வெளியிட்டனர். இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கமல் ரசிகர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் 'விக்ரம்' படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கமல் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலும் 'விக்ரம்' டீஸர் அறிமுக விழா நடைபெற்றது.

அதில் இசையமைப்பாளர் அனிருத் கலந்துகொண்டு பேசியதாவது:

"முதலில் எங்களை ஊக்கப்படுத்துவதற்கு மிகவும் நன்றி. இது உங்களுக்கு 232ஆம் படம். அப்படியானால், தோராயமாகக் கணக்குப் போட்டாலும் இதற்காக 40க்கும் மேலான ஆண்டுகளை நீங்கள் படப்பிடிப்புக்காகச் செலவழித்திருக்கிறீர்கள். இதைவிட ஊக்கப்படுத்தும் விஷயம் ஒரு கலைஞனுக்கு உலகத்திலேயே வேறு எதுவும் இருக்க முடியாது.

லோகேஷ் முதன்முதலில் உங்களை இயக்கப் போவதாகச் சொன்னபோது என் ஸ்டுடியோவில் இருந்த அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தோம்".

இவ்வாறு அனிருத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in