உன் வியர்வை வீண் போகாது: சீமானுக்கு பாரதிராஜா பிறந்த நாள் வாழ்த்து

உன் வியர்வை வீண் போகாது: சீமானுக்கு பாரதிராஜா பிறந்த நாள் வாழ்த்து
Updated on
1 min read

இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானுக்கு இயக்குநர் பாரதிராஜா பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

'பாஞ்சாலங்குறிச்சி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சீமான். பின்பு 'இனியவளே', 'வீரநடை', 'தம்பி', 'வாழ்த்துகள்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு இயக்கத்தில் இருந்து விலகி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார் சீமான்.

சில மாதங்களுக்கு முன்பிலிருந்து மீண்டும் படம் இயக்குவதற்கான வேலைகளைக் கவனித்து வருகிறார். விஜய், சிம்பு, ஜீவா உள்ளிட்ட பல நடிகர்களிடம் கதை சொல்லியிருக்கிறார். இன்று (நவம்பர் 8) தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார் சீமான்.

அவருக்கு அரசியல் கட்சியினர், திரையுலகினர் உள்ளிட்ட பலரும் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். சீமானுக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"நம் இனத்துக்கான உன் போராட்டங்களும் உன் வார்த்தைகளும் இங்கு உற்றுக் கவனிக்கப்படுகிறது. உன் வியர்வை வீண் போகாது. உரமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இளைஞர்களின் அரசியல் ஆசானே. ஒரு நாள் வென்றே தீர்வோம். பேரன்பு கொண்ட மகன் செந்தமிழ் சீமானே. வாழ்த்துகள்".

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in