ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் புதிய படம் அறிவிப்பு

ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் புதிய படம் அறிவிப்பு
Updated on
1 min read

பிரமோத் சுந்தர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அஜித்துடன் 'நேர்கொண்ட பார்வை' படத்துக்குப் பிறகு மாதவனுடன் 'மாறா', விஷாலுடன் 'சக்ரா' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதனைத் தொடர்ந்து தமிழில் நடிக்கவுள்ள படங்களுக்குக் கதைகள் கேட்டு வந்தார்.

அதில் அறிமுக இயக்குநர் பிரமோத் சுந்தர் கூறிய கதை, ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு மிகவும் பிடித்துவிடவே உடனடியாக ஒப்பந்தமானார். விளம்பரத் துறையில் பணிபுரிந்து சில குறும்படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் பிரமோத் சுந்தர். எந்தவொரு இயக்குநரிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரியவில்லை.

பேரழிவுக்குப் பிந்தைய உலகம் எப்படியிருக்கும் என்ற மையக்கருத்தைக் கொண்ட களமாக இந்தப் படம் உருவாகிறது. 'கலியுகம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஆர்.கே இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக கே.எஸ்.ராமகிருஷ்ணா பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார். ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகும் இதன் படப்பிடிப்பு 2021 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் சென்னையில் தொடங்குகிறது.

பி.சி.ஸ்ரீராமிடம் பணிபுரிந்த ராம்சரண் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in