ஜோதிகாவுடன் மீண்டும் நடிப்பது எப்போது?- சூர்யா பதில்

ஜோதிகாவுடன் மீண்டும் நடிப்பது எப்போது?- சூர்யா பதில்
Updated on
1 min read

ஜோதிகாவுடன் எப்போது மீண்டும் நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு சூர்யா பதிலளித்துள்ளார்.

நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு முன் 'பூவெல்லாம் கேட்டுப்பார்', 'உயிரிலே கலந்தது', 'காக்க காக்க', 'பேரழகன்', 'மாயாவி', 'சில்லுனு ஒரு காதல்' உள்ளிட்ட திரைப்படங்களில் இணைந்து நடித்திருந்தனர்.

திருமணத்துக்குப் பின் ஜோதிகா தொடர்ந்து மற்ற படங்களிலும், சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் திரைப்படங்களிலும் நடித்தாலும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவில்லை. 'சூரரைப் போற்று' திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு படத்தின் விளம்பரத்துக்காக, சூர்யா பேட்டியளித்து வருகிறார்.

அப்படி அளித்த ஒரு பேட்டியில், எப்போது நீங்களும் ஜோதிகாவும் மீண்டும் இணைந்து நடிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது.

இதற்கு சூர்யா பதில் அளிக்கையில், "ஹலிதா ஷமீம், அஞ்சலி மேனன் இருவருக்கும் என்னையும், ஜோதிகாவையும் சேர்த்து நடிக்க வைக்கும் திட்டமுள்ளது. அதற்கான கதை, திரைக்கதையை எழுதி வருகின்றனர். எங்கள் ஜோடி திரையில் நடிக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால், அதைக் கட்டாயப்படுத்த முடியாது.

என்னை மனத்தில் வைத்து ஒரு கதை எழுதுங்கள் என்று என்னால் சொல்ல முடியாது. அப்படி எழுதப்படுவதும் எனக்குப் பிடிக்காது. முதலில் கதை, கதாபாத்திரங்கள்தான் முக்கியம். அங்கிருந்துதான் ஆரம்பமாக வேண்டும். அதன்பின் நாங்கள் அதில் சரியாகப் பொருந்த வேண்டும். அப்படித்தான் நடிக்க வேண்டுமேயொழிய நடிகர்களிடமிருந்து, தயாரிப்பாளர்களிடமிருந்து ஆரம்பிக்கக் கூடாது. எனவே இயல்பாக அப்படி ஒரு கதை அமையும் என்று நம்புகிறேன்" என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

'சூரரைப் போற்று' திரைப்படம் நவம்பர் 12 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in