

பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுயோஸ் நிறுவனம் தயாரிப்பில் பத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பிளான் பண்ணி பண்ணனும்'. இதில் ரியோ, ரம்யா நம்பீசன், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கரோனா அச்சுறுத்தலால் இன்னும் வெளியாகாமல் உள்ளது.
இதனிடையே பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள அடுத்த படத்தையும் பத்ரியே இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். முழுக்க ஆக்ஷன் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் கவுதம் கார்த்திக்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது. 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் படத்தின் ஒட்டுமொத்த பணிகளையும் முடிக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது கவுதம் கார்த்திக்குடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.