

தனுஷ் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் 'நானும் ரவுடிதான்' படத்துக்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் அவர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'நானும் ரவுடிதான்'. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இப்படத்துக்கு விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார் தனுஷ்.
இது குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், " 'நானும் ரவுடிதான்' படம் நன்றாக இருக்கிறது என அனைவரும் தெரிவிப்பதால், திரையரங்கின் காட்சிகள் மற்றும் வசூல் ஆகியவை அதிமாகி இருக்கிறது.
இப்படம் முதல் நாளில் 2.16 கோடி வசூல் செய்திருக்கிறது. விஜய் சேதுபதி படங்களில் அதிகமாக வசூல் செய்திருக்கும் படம் இது." என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சென்னை 0.31, செங்கல்பட்டு 0.54, வடக்கு மற்றும் தெற்கு ஆற்காடு 0.30, சேலம் 0.12, கோயம்புத்தூர் 0.31, திருச்சி 0.22, மதுரை 0.25, திருநெல்வேலி 0.11 என மொத்தம் 2.16 கோடி வசூல் செய்திருக்கிறது என ஏரியா வாரியாக வசூல் நிலவரத்தையும் வெளியிட்டிருக்கிறார் தனுஷ்.