என் கனவு நனவானது போல் இருக்கிறது: அபர்ணா பாலமுரளி

என் கனவு நனவானது போல் இருக்கிறது: அபர்ணா பாலமுரளி
Updated on
1 min read

‘சூரரைப் போற்று’ திரைப்படம் மூலம் தன் கனவு நனவானது போல் இருக்கிறது என நடிகை அபர்ணா பாலமுரளி கூறியுள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடித்துள்ள படம் 'சூரரைப் போற்று'. இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று (அக். 26) வெளியானது. ட்ரெய்லரில் நவம்பர் 12-ம் தேதி 'சூரரைப் போற்று' திரைப்படம் வெளியாக இருப்பதை, அமேசான் ப்ரைம் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. தீபாவளி வெளியீடாக வரவிருப்பதால் சூர்யாவின் ரசிகர்கள் பெரும் உற்சாகமாகியுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் நடித்திருப்பது குறித்து அபர்ணா பாலமுரளி கூறியுள்ளதாவது:

''அபாரமான திறமை கொண்ட இயக்குநர் சுதா மற்றும் முன்னணி நடிகர்களுடன் பணிபுரிய 'சூரரைப் போற்று' எனக்கு ஒரு வாய்ப்பு வழங்கியுள்ளது. என் கனவு நனவானது போல் இருக்கிறது. இந்தக் கதாபாத்திரத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். இதற்காக உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தயாராக வேண்டியிருந்தது. கூட்டு முயற்சி, காதல், கஷ்டங்கள், பறப்பதற்கான கனவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கதையின் மூலம் இப்படம் கனவு காண்பவர்களுக்கு பெரும் ஊக்கமாக அமையும்''.

இவ்வாறு அபர்ணா பாலமுரளி கூறியுள்ளார்.

'சூரரைப் போற்று' ட்ரெய்லருக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பிரபலங்கள் பலரும் படக்குழுவினருக்குப் பாராட்டுத் தெரிவித்து வருகிறார்கள். வெளியான சில மணி நேரங்களிலேயே ட்ரெண்டிங்கில் முதல் இடத்தையும் இந்த ட்ரெய்லர் பிடித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in