Published : 26 Oct 2020 08:23 PM
Last Updated : 26 Oct 2020 08:23 PM

செல்வராகவன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக்?

சென்னை

செல்வராகவன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2019-ம் ஆண்டு மே 31-ம் தேதி வெளியான படம் 'என்.ஜி.கே'. இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

'என்.ஜி.கே' படத்துக்குப் பிறகு செல்வராகவன் தனது அடுத்த படத்துக்காகக் கதை எழுதும் பணிகளைக் கவனித்து வந்தார். தாணு தயாரிப்பில் மீண்டும் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் செல்வராகவன் என்று தகவல் வெளியானது. இதற்கு இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணிபுரியவுள்ளார் எனவும் கூறப்பட்டது.

ஆனால், தற்போதுள்ள சூழல்படி 'கர்ணன்', 'அத்ரங்கி ரே', கார்த்திக் நரேன் இயக்கவுள்ள படம், ராம்குமார் இயக்கவுள்ள படம் என தனுஷின் கால்ஷீட் ஃபுல்லாக இருக்கிறது. இந்தப் படங்களுக்குப் பிறகுதான் செல்வராகவன் படத்தில் தனுஷ் நடிக்க முடியும்.

இதனால் தனுஷ் தனது படங்களை முடித்துவிட்டு வருவதற்குள், செல்வராகவன் புதிய படமொன்றை இயக்க முடிவு செய்துள்ளார். இதில் நாயகனாக நடிக்க கவுதம் கார்த்திக்கை சந்தித்துப் பேசியுள்ளதாகத் தெரிகிறது. அவருக்கும் கதை பிடித்துள்ளது.

செல்வராகவன் - கவுதம் கார்த்திக் கூட்டணிப் படம் குறுகியகாலத் தயாரிப்பாக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படவுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை', 'மன்னவன் வந்தானடி' ஆகிய படங்கள் வெளியீட்டுச் சிக்கலில் இருப்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x