இளமைத் துடிப்போடு அனுபவ அறிவும் நடிகர் சங்கத்துக்கு அவசியம்: சேரன் சிறப்பு பேட்டி

இளமைத் துடிப்போடு அனுபவ அறிவும் நடிகர் சங்கத்துக்கு அவசியம்: சேரன் சிறப்பு பேட்டி
Updated on
2 min read

‘‘தொழில் பாதுகாப்புக் காக, தொழில் சார்ந்த பிரச்சினை களை தீர்த்துக்கொள்வதற்காக, வேலைவாய்ப்புக்கான உத்தரவாதத்துக்காக, வேலை செய்யும் அனைவரும் சேர்ந்து உருவாக்கிக்கொள்வதுதான் சங்கம். இந்த சூழ்நிலை நடிகர் சங்கத்தில் இருக்கிறதா?’’ என்ற கேள்வியோடு தொடங்குகிறார் இயக்குநர் சேரன்.

நடிகர் சங்கத் தேர்தல் நெருங்கும் நிலையில், அது பற்றி அலசும் விதமாக அவர் ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி யில் இருந்து..

சினிமா சார்ந்த பெப்சி அமைப்பில் 30 ஆயிரம் உறுப் பினர்கள் உள்ளனர். அவர்களில் 20 ஆயிரம் பேருக்குத்தான் தொடர்ச்சியாக வேலை கிடைக்கும். 3 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் இதே நிலைதான். நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தொழில்சார்ந்த வேலைதான் பார்க்கிறார்களா? இல்லை. ஆனால், பொதுத் தேர்தல்கள்போல நடிகர் சங்கத் தேர்தல் சூடுபிடித்திருக்கிறது.

‘அவர்கள் ரூ.500தான் பென்ஷன் தருகிறார்கள். நாங்கள் 5 ஆயிரம் தருகிறோம்.. இலவசங்கள் கொடுக்கிறோம்’ என்று பிரச்சாரங்கள் நடக்கின்றன. ஒரு நடிகன், கலைஞன் முதலில் எதிர்பார்ப்பது இந்த பென்ஷனையோ, இலவசங்களையோ அல்ல. நல்ல அங்கீகாரம். அதை பெற்றுத் தருவதாக சங்கம் இருக்க வேண்டும்.

சிறிய வேடங்களுக்கு மும்பையில் இருந்து நடிகர், நடிகைகளை வரவழைத்து 15 ஆயிரம், 20 ஆயிரம் கொடுத்து நடிக்கவைக்கிறோம். சங்க உறுப்பினர்கள் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும்.

நடிகர் சங்க இடத்தை வருமானம் ஈட்டித்தரும் இடமாக மாற்ற வேண்டும் என்று ஒரு கூட்டத்தில் ரஜினி சொன்னார். ‘இதோட வேல்யூ பெரிது. தங்கத்தட்டில் வெறும் தேங்காயை வைத்து அழகு பார்க்கிறார்கள். இதை பிசினஸ் இடமாக மாற்றுங்கள்’ என்றார். சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் பயன்படும் விதமாக எப்படி அந்த திட்டத்தை செயல்படுத்தலாம் என்பதை தேர்தல் களத்தில் இருப்பவர்கள் சிந்தித்து, உத்தரவாதம் கொடுக்க வேண்டும். மாறி மாறி குற்றம் சுமத்திக்கொள்ளும் இடம் அல்ல இது. நம் அனைவரின் வளர்ச்சிக்கான களம்.

நாடக நடிகர்களுக்கு தொழில் உத்தரவாதம் அவ சியம். அதற்காக நாடகக்குழு உருவாக்கலாம். 15 ஆண்டுகள் சர்வீஸ் முடிந்தவர்களுக்கு வீடு கட்டித் தரலாம். படத் துக்கு ஹீரோ, ஹீரோயின், குணச்சித்திர முகங்களை தேடுவதோடு இயக்குநரின் வேலை முடிந்துவிடுகிறது. சங்கத்தில் 3 ஆயிரம் முகங்கள் இருக்கின்றன. அவர்களின் அடையாளம் யாருக்கும் தெரிவதில்லை. அனைவரது புகைப் படங்களும், அவர்கள் நடிக்கும் காட்சிகளும் சங்க இணையத்தில் நூலகம்போல தொகுக்கப்பட வேண்டும். தேவைப்படும் நேரத்தில் அவர்களுக்கு வாய்ப்பு தர வசதியாக இருக்கும்.

சாதாரண காரணத்துக்காக..

‘அவருக்கு ஓட்டு போடமாட்டேன். என் ஓட்டு இவருக்குதான்’ என்றார் ஒருவர். காரணம் கேட்டால், என்னை ஒருதடவை அவர் திட்டிவிட்டார் என்கிறார். இன்னொருவர், ‘‘இவங்க திடீர்னு வந்து புதுசு புதுசா சொல்றாங்க. இதெல்லாம் சாத்தியமா?’’ என்கிறார்.

இதுபோல சின்னச் சின்ன காரணங்களை வைத்துக் கொண்டு உறுப்பினர்கள் முடிவு எடுக்கக்கூடாது. எல்லோரையும் கட்டிக் காக்கும் திறமை, இளமைத் துடிப்பு ஆகியவற்றோடு அனுபவ அறிவும் இந்த சங்கத்துக்கு அவசியம். இதையெல்லாம் மனதில் வைத்து உறுப்பினர்கள் ஓட்டு போட வேண்டும். இலவசங் களுக்கு துணைபோகாமல், ஏமாளியாக ஆகிவிடாமல் நன்கு சிந்தித்து ஓட்டு போட வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in