

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட் டையைச் சேர்ந்த மூத்த நடிகர் முகமது காசிம் மரைக்காயரின் மருத்துவச் செலவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், அதன் பொதுச் செயலாளர் விஷால் மருத்துவ நிதியுதவி வழங்கியுள் ளார்.
முத்துப்பேட்டை ஷெரீப் தெரு வைச் சேர்ந்தவர் முகமது காசிம் மரைக்காயர்(80). இவர், எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட நடிகர்களுடன் அதிகம் நடித்துள் ளார். பெரும்பாலும் போலீஸ்காரர் வேடத்தில் அதிகமுறை நடித் துள்ளார். திமுக தலைவர் கருணா நிதியின் கதை-வசனத்தில் உரு வான பூம்புகார் படத்தில் இளங் கோவடிகள் வேடத்தில் நடித்து, பலரிடமும் பாராட்டுப் பெற்றுள் ளார்.
ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்துள்ள முகமது காசிம் மரைக்காயருக்கு 4 மகன்கள், 5 மகள்கள் உள்ளனர். தற்போது அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார். வறுமையில் வாடும் இவரது குடும்பத்தினருக்கும் பெரிய அளவில் வருமானம் இல்லை.
தற்போது திருச்சியில் உள்ள 2-வது மகன் வீட்டில் தங்கி யுள்ளார். இந்நிலையில், அண்மை யில் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில், திருச்சியிலிருந்த படியே வாக்களித்துள்ளார்.
அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால், தலைவர் நாசர் உள்ளிட்ட நிர்வாகிகள் அவருக்கு உதவ முடிவு செய்தனர். இதன்பேரில், அவருக்கு மருத்துவ உதவித் தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ உதவி
இதுகுறித்து அவரது மகன் சுல்தான் கூறும்போது, “அண் மையில் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்றதும், என் தந்தை மகிழ்ச்சியடைந்தார். உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவரும் அவருக்கு, நடிகர் விஷால் மருத்துவ உதவி அளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.