

கிஷோர், சார்லி நடித்துள்ள ‘டிராமா’ திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது.
கிஷோர், சார்லி , நகுலன் வின்சென்ட், ஜெய்பாலா நடித்திருக்கும் படம் ‘டிராமா’. வெறும் எட்டு மணி நேரத்தில் எடுக்கப்பட்ட இப்படம் முழுக்க முழுக்க ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
180 நாட்கள் ரிகர்சல் செய்து பார்த்த பின்பே படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு விளம்பரப் படங்களை இயக்கியுள்ள அஜூ இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம் குறித்து அவர் கூறியுள்ளதாவது:
''கிஷோர் , சார்லி போன்ற அனுபவமிக்க நடிகர்கள் இப்படிப்பட்ட சவாலான படப்பிடிப்பிற்கு ஒத்துழைத்து நடித்ததே இந்தப் படத்தை வெற்றிகரமாக எடுத்து முடிக்கக் காரணமாக இருந்தது.
ஒரே ஷாட்டில் படமாக்குவது எளிதல்ல. அதுவும் ஒரு கமர்ஷியல் படத்தில் இந்த முயற்சி பெரும் சவாலானது. எனது குழுவினரின் முழு ஒத்துழைப்பாலும், நடிகர்களின் முழு அர்ப்பணிப்பாலும் இந்த முயற்சி மிகச் சிறப்பாக வந்திருக்கிறது''.
இவ்வாறு அஜூ கூறியுள்ளார்.