கிசுகிசுக்கள் என்னை பாதிப்பதில்லை: அனுஷ்கா நேர்காணல்

கிசுகிசுக்கள் என்னை பாதிப்பதில்லை: அனுஷ்கா நேர்காணல்
Updated on
2 min read

நடிகை அனுஷ்கா, இயக்குநர் குண சேகருடன் சென்னையில் உள்ள என்ஏசி ஜுவல்லர்ஸ் நகைக் கடையில் ‘ருத்ரமாதேவி’ கலெக்‌ஷன்ஸ் நகைகளை அறிமுகப்படுத்த நேற்று வந்திருந்தார். அவருடன் உரையாடி யதில் இருந்து..

‘பாகுபலி’, ‘ருத்ரமாதேவி’ ஆகிய வரலாற்றுப் படங்களில் நடிக்க நீங்கள் எப்படி ஒப்புக் கொண்டீர்கள்?

‘பாகுபலி’ வரலாற்றுப் படம் அல்ல. அது கற்பனைக் கதை. ஆனால் ‘ருத்ரமாதேவி’ வரலாற்றுக் கதை. ருத்ரமாதேவியின் வர லாற்றை படித்தால் ஒரு ராணியாக அவர் எத்தனை சிக்கல்களைக் கடந்து வந்தார் என்பது உங்களுக்குப் புரியும். அவர் வாழ்ந்தது 13-ம் நூற்றாண்டில். இந்தக் காலத்திலேயே பெண்கள் பல கொடுமைகளை அனு பவித்து வருகிறார்கள். அப் படி இருக்கும்போது 13-வது நூற்றாண்டில் அவர் எத்தனை பிரச்சினைகளை சந்தித்திருப்பார் என்று நினைத்துப் பாருங்கள். இந்தப் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

‘ருத்ரமாதேவி’ படத்தில் நடிக்க உங்களை எப்படி தயார்படுத்திக் கொண்டீர்கள்?

குதிரை, யானை ஆகியவற்றின் மீது சவாரி செய்ய பயிற்சி எடுத்துக் கொண்டேன். லக்ஷ்மி என்ற யானை படப்பிடிப்பின் இறுதியில் என்னுடன் நன்றாக பழகிவிட்டது. யானை மீது ஏறுவதை விட, குதிரை மேல் ஏறுவதே பயமாக இருந்தது.

‘சிங்கம்’ படத்தின் 3-வது பாகத்திலும் நடிக்கவுள்ளீர்கள். ஒரே படத்தின் 3 பாகங் களில் நடிப்பதை எப்படி உணர்கிறீர்கள்?

தற்போது ‘சிங்கம்’ படம் ஒரு பிராண் டாக மாறிவிட்டது. தமிழைப் போல பாலிவுட்டிலும் அதன் இரண்டு பாகங்கள் வந்துவிட்டன. வெற்றிபெற்ற குழுவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது சந்தோஷமாக உள்ளது. அவர்களுடன் ஒரு பந்தம் உருவாகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் என்று உங்களை சிலர் அழைக்கிறார்களே?

இதை என்னால் ஏற்க முடியவில்லை. என்னை அனுஷ்கா என்றோ, ஸ்வீட்டி என்றோ கூப்பிட்டால் போதும். சூப்பர் ஸ்டார் என துறையில் சிலரை மட்டுமே அழைக்க முடியும். நான் அந்த கட்டத்தை நெருங்க முடியாது என நினைக்கிறேன். அந்தப் பட்டம் தகுதியானவர்களுக்கு மட்டும் கிடைத்தால் சிறப்பாக இருக்கும்.

‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் உடல் எடையை ஏற்றி, குறைத்து நடித் திருக்கிறீர்களே?

‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது. அப்பாத்திரத்துக்கு ஏற்றவாறு என் உடல் எடையை கூட்டிக் குறைத்தேன். அப்பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது.அந்தப் படத்துக்கு தேவையான உழைப்பைத் தந்துள்ளேன். தற்போது அப்படத்தை பார்க்கும்போது மகிழ்ச்சி யாக உள்ளது.

ஆர்யாவோடு உங்களை இணைத்து கிசுகிசுக்கள் வெளியாகிறதே?

ஆர்யா மட்டுமல்ல; தெலுங்கில் நான் யாரோடு நடித்தாலும் அவரோடு என்னைச் சேர்த்து வைத்து கிசுகிசு எழுதிவிடுகிறார்கள். ராணாவை என் சகோதரர் என்று அழைப்பதால் அவரை விட்டுவைத்துள்ளார்கள். கிசுகிசுக்கள் ஒரு கட்டத்துக்கு மேல் பழகிவிடும். இப்போது கிசுகிசுக்கள் என்னை பாதிப்பதில்லை. நான் அவற்றை கண்டுகொள்வதும் இல்லை.

எப்போது திருமணம்?

எனக்கும் திருமணம் செய்து கொள்ள ஆசைதான். ஆனால் அது உடனடியாக நடக்காது. நான் ஒப்புக் கொண்ட படங்களின் படப்பிடிப்பு முடியவே 3 வருடங்கள் வரை ஆகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in