உங்கள் கனிவும், அன்புமே என்னை குணமடையச் செய்தது - மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தமன்னா நன்றி

உங்கள் கனிவும், அன்புமே என்னை குணமடையச் செய்தது - மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தமன்னா நன்றி
Updated on
1 min read

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கனிவு மற்றும் அன்பினாலேயே தான் குணமடைந்ததாக நடிகை தமன்னா கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை தமன்னாவுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் ஹைதரபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து தமன்னாவின் ரசிகர்கள் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துத் தெரிவித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து மறுநாளே மருத்துவமனையிலிருந்து தான் வீடு திரும்பியதாக தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான் கரோனாவிலிருந்து குணமடைய உதவிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் தமன்னா நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

ருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோருக்கு நான் எவ்வளவு நன்றிக் கடன் பட்டுள்ளேன் என்பதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. நான் மிகவும் உடல்நலமின்றியும், பயந்தும், பலவீனமாகவும் இருந்தேன். ஆனால் நான் சிரமமின்றி இருக்கவும், சிறந்த முறையில் எனக்கு சிகிச்சை கிடைப்பதையும் நீங்கள் உறுதி செய்தீர்கள். உங்கள் கனிவு, அன்பு, கவனிப்பு ஆகியவை மட்டுமே என்னை குணமாக்கியது.

இவ்வாறு தமன்னா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in