

துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் தனுஷுக்கு நாயகியாக ஷாம்லி ஒப்பந்தமாகி இருக்கிறார்.
பிரபு சாலமன் படத்தைத் தொடர்ந்து துரை.செந்தில்குமார் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் தனுஷ். முதலில் இப்படத்தை தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிக்க முடிவு செய்தார்.
முதன்முறையாக தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கும் இப்படத்தை தற்போது வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் நிறுவனம் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்க இருக்கிறது.
இப்படத்தின் ஒரு நாயகியாக ஷாம்லி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இன்னொரு நாயகி தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.