பாஜகவில் இணைகிறேனா? - எஸ்.ஏ.சி பதில்

பாஜகவில் இணைகிறேனா? - எஸ்.ஏ.சி பதில்
Updated on
1 min read

பாஜகவில் எஸ்.ஏ.சி இணையவுள்ளதாக வெளியான செய்திக்கு எஸ்.ஏ.சி பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக ஆயத்தப் பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கி நடத்தி வருகிறது. மேலும், தேர்தலை மனதில் கொண்டு கட்சியும் மாறி வருகிறார்கள்.

நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியின் தேசியச் செய்தி தொடர்பாளரான குஷ்பு அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இது அரசியல் வட்டாரங்கள் பெரும் விவாதத்துக்கு உள்ளானது. குஷ்புவைத் தொடர்ந்து பலரும் பாஜகவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பாஜகவில் இணையவுள்ளவர்கள் பட்டியலில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பெயர் இடம்பெற்றது. இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. விரைவில் அரசியல் களம் காணவுள்ளார் விஜய் என்று தகவல் வெளியாகி வரும் சமயத்தில், பாஜகவில் எஸ்.ஏ.சி என்ற செய்தியால் அதிர்ச்சியானார்கள்.

பாஜகவில் இணையவுள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக எஸ்.ஏ.சி "பாஜகவில் இணையவுள்ளதாக வெளியான செய்தி தவறானது. அது பொய்" என்று தெரிவித்துள்ளார்.

எஸ்.ஏ.சி இந்தப் பதிலின் மூலம், வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in