

சத்யராஜ், சிபிராஜ் நடிக்க, தரணிதரன் இயக்கிய 'ஜாக்சன் துரை' படத்தின் மொத்த படப்பிடிப்பையும் 35 நாட்களில் முடித்திருக்கிறார்கள்.
'பர்மா' படத்தில் வித்தியாசமான கதைக்களம் மூலம் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் தரணிதரன். அப்படத்தைத் தொடர்ந்து 'ஜாக்சன் துரை' என்று பெயரிடப்பட்ட படத்தை இயக்கி வந்தார்.
சத்யராஜ், சிபிராஜ், பிந்துமாதவி, கருணாகரன், 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வந்த இப்படத்தை சரவணன் தயாரிக்கிறார். 'பர்மா' படத்தைப் போலவே சரியாக திட்டமிட்டு 'ஜாக்சன் துரை' படத்தையும் 35 நாட்களில் முழுப் படப்பிடிப்பையும் முடித்திருக்கிறார் இயக்குநர் தரணிதரன்.
இதற்காக தயாரிப்பாளர் சரவணன், தரணிதரனுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார். 'ஜாக்சன் துரை' படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பு நடைபெறும்போதே இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் விலைக் கொடுத்து வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.