என் வாழ்வில் இந்தத் தவறைச் செய்யமாட்டேன்: சதீஷ்

என் வாழ்வில் இந்தத் தவறைச் செய்யமாட்டேன்: சதீஷ்
Updated on
1 min read

என் வாழ்வில் இதுபோன்ற தவறைச் செய்யமாட்டேன் என்று நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தெற்கு திட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தரையில் அமர வைக்கப்பட்ட புகைப்படம் அக்டோபர் 9-ம் தேதி சமூக வலைதளத்தில் வெளியானது. இதற்குக் கடும் எதிர்ப்பு உருவானது. இந்த விவகாரம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் இந்தச் சம்பவத்துக்குத் தங்களுடைய கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றன.

தற்போது இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"சாதியைக் காட்டி ஒரு ஊராட்சித் தலைவரையே நாற்காலி தராமல் தரையில் அமரவைத்த அவலம்.... கண்டிக்கத்தக்க கொடூரச் செயல். என்னால் சமூகத்தை மாற்ற முடியுமோ இல்லையோ... நான் என் வாழ்வில் இத்தவறைச் செய்யமாட்டேன். தனி மனித ஒழுக்கத்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும். #அனைவரும்சமம்"

இவ்வாறு சதீஷ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in