தயாரிப்பாளரானார் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா

தயாரிப்பாளரானார் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா
Updated on
1 min read

பிரபல ஒளிப்பதிவாளரான பி.ஜி.முத்தையா இரண்டு படங்களைத் தயாரித்து வருகிறார்.

'கண்டேன் காதலை', 'சகுனி', 'சேட்டை', 'சண்டி வீரன்' உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் பி.ஜி.முத்தையா. அவர் தற்போது தயாரிப்பாளராகி இருக்கிறார்.

இயக்குநர் சுசீந்திரனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய உஷா இயக்குநராக அறிமுகமாகும் 'ராஜா மந்திரி' என்னும் படத்தை தயாரித்திருக்கிறார். இப்படத்தில் கலையரசன் மற்றும் பாலசரவணன் இருவரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது தவிர, துருவா மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடித்து வரும் 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தையும் தயாரித்து வருகிறார் முத்தையா. இப்படத்தை புதுமுக இயக்குநர் இயக்கி வருகிறார்.

இரண்டு படங்களையும் சரியான முறையில் திட்டமிட்டு முடித்திருக்கிறார் பி.ஜி.முத்தையா என்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in