

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் 'சிங்கம் 3' திரைப்படம், அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
'சிங்கம்', 'சிங்கம் 2' ஆகிய படங்களின் தொடர்ச்சியாக 'சிங்கம் 3' படத்தை திட்டமிட்டு இருக்கிறது சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணி. இப்படத்துக்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சூர்யா நாயகனாக நடிக்கவிருக்கும் இப்படத்தில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ப்ரியன் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்தை இயக்குநர் ஹரி இயக்க இருக்கிறார்.
இப்படத்துக்கான படப்பிடிப்பை நவம்பரில் துவங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. சரியாக திட்டமிட்டு எப்போதுமே வேகமாக படப்பிடிப்பை முடிக்கும் இயக்குநர் ஹரி, 'சிங்கம் 3' படத்தை 2016 ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
சூர்யா நடித்து வரும் '24' படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் முடிய இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இறுதிகட்டப் பணிகளையும் முடித்துவிட்டு, நவம்பரில் 'சிங்கம் 3'க்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் சூர்யா. '24' திரைப்படம் பொங்கல் 2016க்கு வெளியிட திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.