இப்போது நாயகன் பிம்பத்துக்கான விளக்கம் மாறிவிட்டது: விஜய் யேசுதாஸ்

இப்போது நாயகன் பிம்பத்துக்கான விளக்கம் மாறிவிட்டது: விஜய் யேசுதாஸ்
Updated on
1 min read

இப்போது நாயகன் பிம்பத்துக்கான விளக்கம் மாறிவிட்டது என்று விஜய் யேசுதாஸ் தெரிவித்துள்ளார்.

2015-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 'மாரி' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் விஜய் யேசுதாஸ். அதற்கு முன்னதாக பாடகராக பல்வேறு வரவேற்பு பெற்ற பாடல்களைப் பாடியுள்ளார். 'மாரி' படத்தைத் தொடர்ந்து 'படைவீரன்' படத்தில் நாயகனாக நடித்திருந்தார். அந்தப் படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது.

தற்போது, 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார் விஜய் யேசுதாஸ்.

நடிக்கத் தாமதமாக வந்தது குறித்த கேள்விக்கு விஜய் யேசுதாஸ் கூறியிருப்பதாவது:

"உண்மையில் நான் சீக்கிரமே நடிக்க ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், என் அப்பா என்னை ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தச் சொன்னார். அதனால் இசையில் கவனம் செலுத்தினேன். இளம்வயதில் நடிக்க ஆரம்பித்தால் அதில் ஒரு சாதகம் உண்டு. நான் 10-15 வருடங்கள் தாமதமாகத்தான் ஆரம்பித்தேன்.

ஆனால், இப்போது நாயகன் என்கிற பிம்பத்துக்கான விளக்கம் மாறிவிட்டது. அதனால் இந்தத் தாமதம் குறித்து எனக்கு வருத்தமில்லை. என்னால் இசையில் முதலில் கவனம் செலுத்த முடிந்ததில் மகிழ்ச்சியே".

இவ்வாறு விஜய் யேசுதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ஊரடங்கு சமயத்தில் சில கதைகளையும் கேட்டு ஆலோசித்துள்ளார். தற்போது 'சால்மன்' என்கிற பன்மொழி 3டி திரைப்படத்தில் விஜய் யேசுதாஸ் நடித்து வருகிறார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in