

'அனேகன்' படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில், நாயகனாக நடிக்கவிருக்கிறார் ஆர்யா.
தனுஷ், அமைரா, கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்த 'அனேகன்' படத்தை இயக்கியவர் கே.வி.ஆனந்த். அதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். கதை விவாதம் முடிந்தவுடன் அக்கதைக்கு ஏற்றார் போன்ற நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அஜித், சிவகார்த்திகேயன் என பல்வேறு நாயகர்களை இயக்க இருக்கிறார் கே.வி.ஆனந்த் என செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.
இந்நிலையில், கே.வி.ஆனந்த் கதையில் ஆர்யா நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது என்கிறது கோலிவுட். கே.வி.ஆனந்த் சொன்ன கதை ஆர்யாவுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.
இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.