ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக க்ருதி கர்பந்தா

ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக க்ருதி கர்பந்தா

Published on

'ப்ரூஸ் லீ' படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடிக்க க்ருதி கர்பந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்திருக்கும் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' திரைப்படம் தற்போது விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. சுமார் 3 கோடி பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் 12.5 கோடி வசூல் செய்திருக்கிறது. பல்வேறு விமர்சனங்களையும் தாண்டி இப்படம் வரவேற்பைப் பெற்றிருப்பதால் சந்தோஷத்தில் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தைத் தொடர்ந்து 'ப்ரூஸ் லீ', 'கெட்ட பயடா இந்த கார்த்தி' மற்றும் சாம் ஆண்டன் இயக்கவிருக்கும் படம் ஆகிய படங்களில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

இதில் 'ப்ரூஸ் லீ' படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் துவங்க இருக்கிறது. பாண்டிராஜிடம் இணை இயக்குநராக பணியாற்றிய பிரசாந்த் இயக்கவிருக்கிறார். பாண்டிராஜ் வசனம் எழுதியிருக்கும் இப்படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இப்படத்தின் நாயகியாக க்ருதி கர்பந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் க்ருதி நடிக்கும் முதல் படம் 'ப்ரூஸ் லீ' என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 'கெட்ட பயடா இந்த கார்த்தி' மற்றும் சாம் ஆண்டன் இயக்கவிருக்கும் படம் ஆகிய இரண்டு படங்களையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in