

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'தூங்காவனம்' படத்தின் இயக்குநரான ராஜேஷ் எம் செல்வா மீண்டும் கமலுடன் இணைந்து ஒரு காமெடி படத்தை இயக்கவுள்ளர். இந்த படத்தின் கதை, திரைக்கதையை இயக்குநர் மற்றும் நடிகர் மவுலி எழுதுகிறார்.
’தூங்காவனம்’ படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் தான் நிறைவடைந்தது. கமல்ஹாசனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ராஜேஷ் எம் செல்வா இந்த படத்தை இயக்கியிருந்தார். தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும் காமெடி படத்தையும் ராஜேஷ் இயக்கவுள்ளார்.
’உத்தமவில்லன்’ படத்தில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடுகட்டும் வகையில், லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனத்துக்கு இன்னொரு படத்தில் நடித்துத் தருவதாக கமல் உறுதியளித்திருந்தார். எனவே லிங்குசாமியே இந்த படத்தை தயாரிக்கலாம் என்று தெரிகிறது.
’தூங்காவனம்’ வெளியான பின், இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் குழு இறுதி செய்யப்படும்.