

அறிமுக இயக்குநர் பாக்யராஜின் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசனை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
இயக்குநர் அட்லியிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் பாக்யராஜ். இவர் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசனை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதுகுறித்து ஸ்ருதி ஹாசனின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம்.
''சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க ஸ்ருதி தயாராக இருக்கிறார். சம்பளம் உள்ளிட்ட சில விஷயங்களும் பேசியாகிவிட்டது. படப்பிடிப்பு நடைபெறும் தேதிகள் மட்டும் தெரிந்துகொண்டால் ஸ்ருதி நடிப்பது உறுதியாகிவிடும்'' என்கின்றனர்.
சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான ராஜா, 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் என்ற பெயரில் இப்படத்தை தயாரிக்கிறார்.
ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசையமைப்பாளர் அனிருத், ஒலி வடிவமைப்புக்கு ரசூல் பூக்குட்டி, சிறப்பு மேக்கப்புக்கு ''வீடா' (Weta) நிறுவனத்தைச் சேர்ந்த ஷான் ஃபுட் என ஒரு பெரிய அணியே இப்படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.