முதன்முதலாக வர்த்தக விளம்பரத்தில் கால் பதிக்கும் கமல்!

முதன்முதலாக வர்த்தக விளம்பரத்தில் கால் பதிக்கும் கமல்!
Updated on: 
1 min read

முதன்முறையாக வர்த்தக விளம்பரப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கமல். அதற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது.

இதுவரை பல்வேறு நிறுவனங்கள் கேட்டும், கமல் வர்த்தக விளம்பரங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். எந்த ஒரு விளம்பரங்களில் கமல் இதுவரை நடித்ததில்லை, மாறாக விழிப்புணர்வு விளம்பரங்களில் மட்டுமே நடித்திருக்கிறார்.

இந்நிலையில், முதன்முறையாக ஜவுளிக் கடை விளம்பரம் ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் கமல். இதற்கான படப்பிடிப்பு வரும் வாரம் நடைபெற இருக்கிறது.

இந்த விளம்பரப் படத்தை கிருஷ்ணா இயக்கவிருக்கிறார். '5 ஸ்டார்’, 'அறிந்தும் அறியாமாலும்', 'யட்சன்' உள்ளிட்ட படங்களில் நடித்த கிருஷ்ணா தான் இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in