

மலையாளத்தில் இந்த வருடம் சூப்பர் ஹிட்டான 'ப்ரேமம்' படத்தின் தெலுங்கு பதிப்புக்கு 'மஜ்னு' என பெயரிடப்பட்டுள்ளது. இதில் நாயகனாக நாக சைதன்யா நடிகிறார்.
ஒரு இளைஞனின் வாழ்வில் பல்வேறு கட்டங்களில் வரும் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'ப்ரேமம்', மலையாளத் திரையுலகில் வசூல் சாதனை படைத்தது. மே மாதம் வெளியான இந்தப் படம், இன்றும் சில அரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது. 'ப்ரேமம்' படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை எஸ். ராதா கிருஷணன் என்பவர் வாங்கியுள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருடக் கடைசியிலோ, அடுத்த வருடத்தின் துவக்கத்திலோ தொடங்கும் எனத் தெரிகிறது. சந்து மந்தேடி இயக்கவுள்ள இந்தப் படத்தில் நாயகிகளாக 'அனேகன்' படத்தில் நடித்த அமைரா தஸ்தர், 'ப்ரேமம்' படத்தில் நடித்த அனுபமா ஆகியோர் நடிக்கவுள்ளனர். மூன்றாவது நாயகியாக ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.