

நான் இனிமேல் ட்விட்டரில் தொடர போவதில்லை என சிம்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
'வாலு' திரைப்படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து சிம்பு இடை விடாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.இந்நிலையில், இனி தான் இனிமேல் ட்விட்டரில் தொடர போவதில்லை என அறிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் சிம்பு கூறியதாவது: ''இதுவரை என் ரசிகர்களும் , என் நண்பர்களும் என்னை ட்விட்டரில் தொடர்ந்தவாறு இருந்தமைக்கு நன்றி. இன்று முதல் எனது ட்விட்டர்,எனது ரசிக மன்ற நிர்வாகிகளால் நிர்வகிக்கப்படும் .
தேவைப்பட்டால் மட்டுமே நான் என் கருத்தை பதிப்பேன்.ஒரு நடிகனாக என்னுடைய கடமை என் ரசிகனுக்கு நல்ல தரமான படம் கொடுக்க வேண்டும் என்பது தான்.அவர்களுடனான என்னுடைய தொடர்ப்பு வெற்றி படம் மட்டும் தான் , தவிர இதை போன்ற சமூக வலை தளங்களில் இல்லை என்பதையும் நான் உணர்ந்து கொண்டேன்.
என்னுடைய இந்த முடிவை என் ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை'' என்று சிம்பு கூறியுள்ளார்.