மக்கள் சேவைக்காக அரசியலுக்கு வருவேன்: நடிகை நமீதா பேட்டி

மக்கள் சேவைக்காக அரசியலுக்கு வருவேன்: நடிகை நமீதா பேட்டி
Updated on
1 min read

மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலுக்கு வர விரும்புகிறேன் என்று நடிகை நமீதா கூறியுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளாக படங் களில் நடிக்காமல் இருந்த நடிகை நமீதா, தற்போது உடல் எடையை 18 கிலோ குறைத்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்துவிட்டேன். தமிழில் வெளிவந்த ‘இளைஞன்’ படத்துக்கு பிறகு நான் நடிக்கவில்லை. இடைப்பட்ட காலத்தில் வாய்ப்பு வராமல் இருந்ததற்கு காரணம் என் உடல் எடை கூடியதுதான் தற்போது என் உடல் எடையை 18 கிலோ வரை குறைத்துவிட்டேன். மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க விரும்புகிறேன்.

அரசியலில் இறங்க வேண்டும் என்ற ஆசை எனக்கு நீண்ட நாட்களாக உள்ளது. மக்கள் சேவைக்காக அரசியலுக்கு வர விரும்புகிறேன். எனக்கு பல கட்சிகளிடம் இருந்தும் அழைப்பு வந்துள்ளது. என்னை எந்தெந்த கட்சிகள் அழைத்தன என்பதை இப்போது கூற முடியாது நல்ல மாப்பிள்ளை அமைந்தால் திருமணம் செய்துகொள்வேன்.

இவ்வாறு நமீதா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in