புலி படத்துக்கு தடை கோரி வழக்கு

புலி படத்துக்கு தடை கோரி வழக்கு
Updated on
1 min read

நடிகர் விஜய் நடித்து, விரைவில் வெளிவரவுள்ள புலி படத்துக்கு தடை விதிக்கக் கோரி தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு ராஜசேகர். இவர், ‘தாகபூமி’ என்ற தனது குறும்படத்தை, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘கத்தி’ என்ற பெயரில் படமாக எடுத்து வெளியிட்டதாகவும், இதற்காக முருகதாஸ், தயாரிப்பாளர் கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், நடிகர் விஜய் ஆகியோர் இழப்பீடு வழங்கக் கோரியும் தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் 2014 டிசம்பர் 22-ல் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விஜய் நடித்த ‘புலி’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி, தஞ்சை நீதிமன்றத்தில் அண்மையில் அன்பு ராஜசேகர் மற்றொரு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் பதில் அளிக்குமாறு இயக்குநர் முருகதாஸ், நடிகர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. வழக்கின் அடுத்த விசாரணை அக். 7க்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in