

கணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் 'வீரசிவாஜி' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் பாண்டிச்சேரியில் துவங்கியது.
ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வரும் 'வாஹா' படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றது. இறுதிகட்டப் பணிகள் துவங்கப்பட்டு இருக்கும் இப்படத்துக்கு இன்னும் ஒரு பாடல் மட்டுமே காட்சிப்படுத்த வேண்டியிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து கணேஷ் விநாயக் இயக்கத்தில் 'வீரசிவாஜி' என்னும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் விக்ரம் பிரபு. ஷாம்லி, ஜான் விஜய், 'நான் கடவுள்' ராஜேந்திரன், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் விக்ரம் பிரபுவுடன் நடிக்கவிருக்கிறார்கள். இமான் இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் இன்று தொடங்கியது. கார் ஒட்டுநர் வேடத்தில் விக்ரம் பிரபு நடிக்கவிருக்கும் இப்படத்தில் ஜான்விஜய் வில்லனாக நடிக்க இருக்கிறார். தன்னை ஏமாற்றிய வில்லனை, நாயகன் எப்படி திட்டமிட்டு பழிவாங்கினான் என்பதே 'வீரசிவாஜி' என்கிறது படக்குழு.
'ரோமியோ ஜூலியட்' படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் இப்படத்தை தயாரித்து வருகிறார்.