'வலிமை' படப்பிடிப்பு தொடங்கியது

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராகவும், யுவன் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படம் கரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்டுள்ளது.

சுமார் 60% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. கரோனா அச்சுறுத்தலுக்கு முன்பு சென்னையில் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளைப் படமாக்கியிருந்தார்கள். தற்போது தமிழக அரசு அனுமதியளித்துவிட்டதால், 'வலிமை' படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்தது.

இதனிடையே, இன்று (செப்டம்பர் 23) 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதில் அஜித் உள்ளிட்ட முக்கியமான நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. சிறுசிறு காட்சிகளை மட்டும் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

விரைவில் அஜித் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் கலந்துகொள்ளும் படப்பிடிப்பு சென்னையிலேயே அரங்குகளில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in