'ஜோசப்' ரீமேக்கான 'விசித்திரன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

'ஜோசப்' ரீமேக்கான 'விசித்திரன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Updated on
1 min read

'ஜோசப்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'விசித்திரன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்

மலையாளத்தில் எம்.பத்மகுமார் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ், ஆத்மியா ராஜன், மாளவிகா, திலேஷ் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான படம் 'ஜோசப்'. இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, இதன் தமிழ் ரீமேக் உரிமையை ஆர்.கே.சுரேஷ் கைப்பற்றினார்.

ஜோஜு ஜார்ஜ் கதாபாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிக்க படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்த ரீமேக்கையும் இயக்குநர் எம்.பத்மகுமாரே இயக்கியுள்ளார். ஜனவரி 20-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது.

இதில் பூர்ணா, மதுஷாலினி உள்ளிட்ட பலர் ஆர்.கே.சுரேஷ் உடன் நடித்துள்ளனர். பாடலாசிரியராக யுகபாரதி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது இந்தப் படத்துக்கு 'விசித்திரன்' எனப் பெயரிடப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். திரையுலகினர் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in