

ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா, ஹன்சிகா இணையும் படத்துக்கு 'போக்கிரி ராஜா' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
ராம்நாத் இயக்கத்தில் ஜீவா, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'திருநாள்' படத்தின் மொத்த படப்பிடிப்பு முடிவுற்றது. இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து 'தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்' படத்தின் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் ஜீவா. நாயகியாக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இப்படத்துக்கு 'போக்கிரி ராஜா' என தலைப்பிட்டு இருக்கிறார்கள். இப்படத்தை பி.டி.செல்வகுமார் தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்க இருக்கிறது.