11 ஆண்டுகளில் திரையுலகில் ஏற்பட்டுள்ள மாற்றம்: விஷ்ணு விஷால் பட்டியல்

11 ஆண்டுகளில் திரையுலகில் ஏற்பட்டுள்ள மாற்றம்: விஷ்ணு விஷால் பட்டியல்
Updated on
1 min read

11 ஆண்டுகளில் திரையுலகில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பாக விஷ்ணு விஷால் பட்டியலிட்டுள்ளார்.

கடந்த சில வருடங்களாக திரையுலகம் பல்வேறு வளர்ச்சிகளைக் கொண்டுள்ளது. தற்போது கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் தயாராகியுள்ள படங்கள் யாவும், மாற்று வழியாக ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.

ஓடிடி வெளியீட்டுக்கு எதிர்ப்புகள் இருந்தாலும், தயாரிப்பாளர்கள் வேறுக்கு வழியில்லை. தமிழில் மட்டுமல்லாது, இந்திய அளவில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

இதனிடையே, தான் திரையுலகில் நுழைந்த 11 ஆண்டுகளில் திரையுலகில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பாக விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பதிவில் கடிதமொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"நான் சினிமாவுக்குள் நுழைந்த 11 ஆண்டுகளில் பல விஷயங்கள் மாறிவிட்டன. பிலிம் ரீலிலிருந்து டிஜிட்டல் சினிமாவுக்கும், இணை இயக்குநர்களிலிருந்து குறும்பட இயக்குநர்கள் வரை அறிமுகமாகி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு திரைத்துறையில் ஆதிக்க செலுத்துவதாகட்டும், கமர்ஷியல் படங்களிலிருந்து கதைகளுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களுக்கு மாறியதாகட்டும், பெரிய திரையிலிருந்து மொபைல் திரைகளுக்கு மாறியதாகட்டும், இயக்குநர் நடிகர்களாகவும், இசையமைப்பாளர்கள் ஹீரோக்களாக மாறியதாகட்டும். கரோனா காரணமாக ஓடிடி தளத்தால் உலக சினிமா பரவலாக்கப்பட்டு விட்டது. வேறெந்த பத்தாண்டுகளும் இந்த அளவு மிகப்பெரிய மாற்றங்களைப் பார்த்திருக்காது. இறுதியாக, மாற்றம் ஒன்றே மாறாதது. ஏற்றுக்கொள்ளுங்கள், கற்றுக் கொள்ளுங்கள், வளருங்கள். அது மட்டுமே ஒரே வழி"

இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in