உருவாகிறது 'தர்மபிரபு 2': இயக்குநர் முத்துக்குமரன் தகவல்

உருவாகிறது 'தர்மபிரபு 2': இயக்குநர் முத்துக்குமரன் தகவல்
Updated on
1 min read

'தர்மபிரபு' படத்தின் 2-ம் பாகத்துக்கான கதையை எழுதி வருவதாக இயக்குநர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி வெளியான படம் 'தர்மபிரபு'. முத்துக்குமரன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் யோகி பாபு, ராதாரவி, ரமேஷ் திலக், ரேகா, மேக்னா நாயுடு, அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ராக்லைன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

அந்தப் படத்துக்குப் பிறகு முத்துக்குமரன் இன்னும் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. இதனிடையே, 'தர்ம்பிரபு 2' படத்துக்கான கதையை எழுதி வருகிறார் முத்துக்குமரன். இந்தப் படத்தின் கதைக்களம் தொடர்பாக யோகி பாபுவிடமும் பேசியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முழுக்கதையையும் முடித்து, தயாரிப்பாளர் முடிவானவுடன் 'தர்மபிரபு 2' குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. மேலும், முத்துக்குமரன் இயக்கத்தில் உருவான முதல் படமான 'கன்னிராசி' இன்னும் பைனான்ஸ் சிக்கலால் வெளியாகாமல் உள்ளது. இதில் விமல், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in