

தனுஷ் தயாரித்திருக்கும் 'விசாரணை' மற்றும் 'நானும் ரவுடிதான்' படங்களின் உரிமையை லைக்கா நிறுவனம் கையகப்படுத்தியது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'விசாரணை'. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ’லாக் அப்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'நானும் ரவுடிதான்'. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். விரைவில் இப்படத்தின் இசையை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இந்த இரு படங்களின் உரிமையைக் கைப்பற்ற பல்வேறு நிறுவனங்கள் போட்டியிட்டு வந்தன. இறுதியாக லைக்கா நிறுவனம் இவ்விரண்டு படங்களின் உரிமையையும் ஒன்றாக கையகப்படுத்தியிருக்கிறது.
'விசாரணை' படத்தினை உலகளவில் வெளியிட அனைத்து உரிமைகளையும் மற்றும் 'நானும் ரவுடிதான்' படத்தின் தமிழக உரிமையையும் லைக்கா நிறுவனம் வசப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.