நடிகர் ராமராஜனுக்கு கரோனா தொற்று

நடிகர் ராமராஜனுக்கு கரோனா தொற்று
Updated on
1 min read

நடிகர் ராமராஜனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கிண்டியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகத்தில் கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இப்போது சகஜ நிலை திரும்பியுள்ளது. ஆனால், ஒரு சில மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்திலும் கரோனா அச்சுறுத்தல் என்பது இருந்துக் கொண்டுதான் இருக்கிறது.

தற்போது நடிகர் ராமராஜனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 'கரகாட்டக்காரன்', 'எங்க ஊரு பாட்டுக்காரன்', 'ஊருவிட்டு ஊருவந்து' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் ராமராஜன். சில தினங்களாக காய்ச்சல், இருமலால் அவதிப்பட்டு வந்த அவர் கரோனா பரிசோதனை செய்துக் கொண்டார்.

இதில், அவருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து, சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் அமைக்கபட்டுள்ள கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மருத்துவர்களிடம் கேட்ட போது, ராமராஜன் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரான இவர், திருச்செந்தூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருந்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in