

மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு தமிழக அரசுக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அளிப்பதற்கான சட்ட மசோதா பேரவையில் நேற்று (செப்டம்பர் 15) ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு பலரும் சமூக வலைதளத்தில் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.
உள் இடஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு சூர்யாவும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சூர்யா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மாணவர்களுக்குத் துணை நிற்போம்... ஒன்றிணைந்து செயல்படுவோம்"
இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு நீட் தேர்வுக்கு எதிராக சூர்யா வெளியிட்ட அறிக்கை பெரும் விவாதத்தை உண்டாக்கியது