க/பெ. ரணசிங்கம் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

க/பெ. ரணசிங்கம் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
Updated on
1 min read

ஜீ ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் 'க/பெ ரணசிங்கம்' படத்தின் வெளியீடு எப்போது என்பதை அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'க/பெ ரணசிங்கம்'. பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்த பெரிய கருப்பத்தேவரின் மகன் பெ.விருமாண்டி இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம், இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளனர். கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாத காரணத்தால் ஓடிடி தளத்தில் 'க/பெ ரணசிங்கம்' வெளியாகவுள்ளது.

ஜீ ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் திரையரங்குகள் பாணியில் காட்சிக்குக் கட்டணம் செலுத்திப் பார்க்கும் முறையில் வெளியாகும் முதல் தமிழ்ப் படமாக 'க/பெ ரணசிங்கம்' அமைந்துள்ளது. ஓடிடி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டாலும், எப்போது வெளியாகும் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது.

தற்போது அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் என்பதை அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 இந்திய மொழிகளிலும் ஒரே சமயத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. மேலும், 10-க்கும் மேற்பட்ட சர்வதேச மொழிகளில் சப்-டைட்டில் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in