கமல் - சிம்பு கூட்டணியில் உருவாகிறது 'சிகப்பு ரோஜாக்கள் 2'?

கமல் - சிம்பு கூட்டணியில் உருவாகிறது 'சிகப்பு ரோஜாக்கள் 2'?
Updated on
1 min read

'சிகப்பு ரோஜாக்கள் 2' படத்தில் கமல் - சிம்புவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

கமல், ஸ்ரீதேவி நடிப்பில், பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் 'சிகப்பு ரோஜாக்கள்'. 1978-ம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இளையராஜா இசையமைத்து இருந்தார்.

இந்தப் படத்தின் 2-ம் பாகம் தொடர்பாக அவ்வப்போது செய்திகள் வெளியாவது உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதிராஜா தயாரிப்பில் மனோஜ் இயக்கத்தில் 'சிகப்பு ரோஜாக்கள் 2' அறிவிக்கப்பட்டது. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருந்தார். அந்தப் படம் அறிவிப்புடனே நின்றுவிட்டது.

சில தினங்களுக்கு முன்பு கூட 'சிகப்பு ரோஜாக்கள் 2' குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. என்னவென்றால் மனோஜ் பாரதி இயக்கவுள்ள 'சிகப்பு ரோஜாக்கள் 2' படத்தில் சிம்புவை நாயகனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கமலையும் நடிக்க வைக்க அணுகவுள்ளனர். இந்தப் படத்தின் பட்ஜெட் என்ன, சிம்புவின் சம்பளம் உள்ளிட்ட அனைத்துமே பேசி முடிவானவுடன் தான் தயாரிப்பாளரை முடிவு செய்யவுள்ளனர்.

இன்னும் பேச்சுவார்த்தையில் இருக்கும் இந்தப் படம், அடுத்து வரும் நாட்களில் என்ன நிலை என்பது தெரிந்துவிடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in