வடிவேல் பாலாஜி குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்ற சிவகார்த்திகேயன்

வடிவேல் பாலாஜி குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்ற சிவகார்த்திகேயன்
Updated on
1 min read

மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜி குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுள்ளார் சிவகார்த்திகேயன்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'அது இது எது', 'கலக்கப் போவது யாரு' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. நடிகர் வடிவேலு மாதிரியே கெட்டப் போட்டு காமெடி செய்வதால் 'வடிவேல்' பாலாஜி என்று அழைக்கப்பட்டார்.

சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு, போதிய பணவசதி இல்லாததால் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (செப்டம்பர் 10) காலை காலமானார்.

'அது இது எது' நிகழ்ச்சியை சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கி வந்த போது, அதில் வரும் 'சிரிச்சா போச்சு' சுற்றில் வடிவேல் பாலாஜி தான் பங்கேற்றிருப்பார். அப்போதிலிருந்து சிவகார்த்திகேயன் - வடிவேல் பாலாஜி இருவருமே நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர்.

வடிவேல் பாலாஜியின் மறைவு சிவகார்த்திகேயனை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. வடிவேல் பாலாஜியின் மகன் ஸ்ரீகாந்த், மகள் சத்யஸ்ரீ ஆகியோரின் கல்விச் செலவைத் தான் ஏற்றுக் கொள்வதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதனை சிவகார்த்திகேயன் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், வடிவேலு பாலாஜியின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in