

'கோச்சடையான்' படத்திற்கு பின்னணி இசை, தனக்கு மிகவும் சவாலானதாக இருந்ததாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை வெளியான 'கோச்சடையான்' படத்தின் பின்னணி இசைக்கு பல்வேறு தரப்பினரும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். விமர்சகர்கள் பலரும் பாடலுக்கான இசையை விட, பின்னணி இசை பிரமாதமாக இருந்ததாக தெரிவித்தனர்.
இந்நிலையில் 'கோச்சடையான்' படத்தில் தன்னுடைய பணி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
"'கோச்சடையான்' படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணி மிகவும் சவாலானதாக இருந்தது. என்னுடைய இசையமைப்பு குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
'கோச்சடையான்' படத்தினைப் பொறுத்தவரை கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்தேன்.
இப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.