காதல் தோல்விக்கு பிறகு நடித்ததே சிறந்த நடிப்பு: விஷால் உருக்கம்

காதல் தோல்விக்கு பிறகு நடித்ததே சிறந்த நடிப்பு: விஷால் உருக்கம்
Updated on
1 min read

காதல் தோல்விக்கு பிறகு நான் நடித்த படமே, என் நடிப்பில் வெளியான படங்களில் சிறந்த நடிப்பு என்று விஷால் தெரிவித்துள்ளார்.

எம்.ஓ.பி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஷால் மற்றும் இயக்குநர் சுசீந்திரன் கலந்து கொண்டு மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்.

அப்போது "உங்கள் நடிப்பில் வெளியான படங்களில் சிறந்த நடிப்பு என்றால் எதைச் சொல்வீர்கள்" என்ற கேள்விக்கு நடிகர் விஷால், "இதே கேள்வியை இதற்கு முன் ஒருவர் கேட்டார். அப்போது பதில் சொல்லவில்லை. இன்று சொல்கிறேன்.

எனது காதல் தோல்விக்குப் பிறகு நான் நடித்த படம் தான் எனது சிறந்த நடிப்பு என நினைக்கீறேன். ஏனென்றால் நான் மொத்தமாக உடைந்து போயிருந்தேன். ஷூட்டிங் செல்லவும் பிடிக்கவில்லை. ஆனால் இதுதான் என் தொழில், இதை தவிர்க்க முடியாத என ஷூட்டிங் சென்றேன். எனது நிலையை நினைத்துப் பாருங்க.

என் வலி அனைத்தையும் ஓரம் தள்ளி விட்டு மேக்கப் போட்டுக் கொண்டு நடிக்க வேண்டும் என்பது கடினமான ஒன்று. அதுதான் என் நடிப்பில் இதுவரை சிறந்தது என்று சொல்லுவேன். படத்தின் பெயரை கூற முடியாது" என்று பதிலளித்திருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in