விஷாலின் ‘பாயும் புலி படத்துக்கு எதிர்ப்பு: விநியோகஸ்தர் மீது போலீஸில் புகார்

விஷாலின் ‘பாயும் புலி படத்துக்கு எதிர்ப்பு: விநியோகஸ்தர் மீது போலீஸில் புகார்
Updated on
1 min read

பாயும் புலி திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த விநி யோகஸ்தர் மீது போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு மற்றும் நிர்வாகிகள், தயாரிப்பாளர்கள் சேர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று காலையில் வந்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், "வேந்தர் மூவீஸ் சார்பில் வருகிற 4-ம் தேதி 'பாயும் புலி' திரைப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. லிங்கா திரைப்பட விவகாரத்தில் வேந்தர் மூவீஸ் நிறுவனத்துக்கும், சிங்காரவேலன் என்ற விநியோகஸ்தருக்கும் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் பாயும் புலி திரைப்படத்தை வெளியிடுவதற்கு பல இடையூறு களை செய்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை திரையிடக் கூடாது என்று தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்க உரிமையாளர்களை மிரட்டி வருகிறார். உண்மைக்குப் புறம்பான தகவல்களையும் பரப்புகிறார். எனவே, சிங்காரவேலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in