போக்கிரி ராஜா-வில் இணைந்த சிபிராஜ்

போக்கிரி ராஜா-வில் இணைந்த சிபிராஜ்
Updated on
1 min read

ஜீவா, ஹன்சிகா நடிக்கவிருக்கும் 'போக்கிரி ராஜா' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிபிராஜ்.

ராம்நாத் இயக்கத்தில் ஜீவா, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'திருநாள்' படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவுற்றது. இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தைத் தொடர்ந்து 'தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்' படத்தின் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் ஜீவா. நாயகியாக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இப்படத்துக்கு 'போக்கிரி ராஜா' என தலைப்பிட்டு இருக்கிறார்கள். இப்படத்தை பி.டி.செல்வகுமார் தயாரிக்க இருக்கிறார்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க சிபிராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in